மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளாா்.
அதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மேலும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என அவா் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அண்மித்த பகுதிகளில் சுமார் 4,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.#மினுவாங்கொடை #தனிமைப்படுத்தல் #சவேந்திரசில்வா #கொரோனா