Home இலங்கைமன்னாரில் கடும் மழை- இயல்புநிலை பாதிப்பு

மன்னாரில் கடும் மழை- இயல்புநிலை பாதிப்பு

by admin

மன்னார் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை(8) காலை 6.30 மணி முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இன்றைய தினம் காலை மக்களின் அன்றாட செயற்பாடுகள் சற்று பாதிப்படைந்திருந்தது.

இதே வேளை வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.#மன்னார் #மழை #பாதிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More