யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகிலிருந்து அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள குறித்த வெடிபொருட்களில் ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட 4 கிலோ 3 கிராம் வெடி மருந்துப் பொதி மற்றும் 10 ரெனரேட்டர்கள் என்பன உள்ளடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி மருந்து மற்றும் ரெடினேற்றர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனா். #யாழ் #சென்பற்றிக்ஸ்கல்லூரி #வெடிபொருட்கள் #மீட்பு