தாய்லாந்தில் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் பாங்கொக்கில் ஒன்றுகூடி கூட்டங்களை நடாத்துவதாக தெரிவித்துள்ள காவல்துறையினா் சுமாா் 20 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனா்.
தாய்லாந்தில் மன்னா் ஆட்சி மாற வேண்டும் எனவும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோாி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது #Thailand #தாய்லாந்து #பாங்கொக் #அவசரகாலநிலை #ஆர்ப்பாட்டங்கள்