சஹரான் ஹஷீம் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிருந்ததாக கிடைத்த புலனாய்வு தகவல் தொடர்பில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியாகும் போது சுமார் 15000 பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று (19.10.20) தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன இன்று சாட்சியமளித்தார்.
ஏப்ரல் 11 ஆம் திகதியாகும் போது இந்த தாக்குதல் தொடர்பில் சுமார் 15000 பேர் அறிந்திருந்தாக அவர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை பொறுப்புடன் கூறுகின்றீர்களா என ஆணைக்குழுவின் நீதிபதி இதன்போது வினவியுள்ளார்.
மேல் மாகாணத்திலுள்ள சுமார் 8000 அதிகாரிகளுக்கு அறிவித்ததாக காவற்ததுறை மா அதிபர் ஏற்கனவே ஆணைக்குழுவில் தெரிவித்ததாகவும் காவற்துறை விசேட அதிரடிப் படையினர், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கலாக சுமார் 15000 பேர் தாக்குதல் குறித்து அறிந்திருந்ததாகவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.