கொரோ வைரஸ் இலங்கையில் சமூக தொற்று நிலைக்கு வந்துள்ளதாக தொிவித்துள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை மோசமான நிலையாகும் என எச்சாித்துள்ளாா்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
இலங்கையில் 21க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள அவா் பல உப கொத்தணிகள் உருவாகியுள்ளதாகவும் அவை மினுவாங்கொடை கொத்தணியுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதும் சில சந்தர்ப்பங்களில் அவற்றைக் கண்டு பிடிக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். #கொரோனா #இலங்கை #சமூகதொற்று #உபகொத்தணிகள்