இலங்கையின் பிரதமர் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கு கொரோனா…
இலங்கையின் பிரதமர் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது
கொழும்பு – குணசிங்கபுரத்தில் 77 பேருக்குக் கொரோனா
கொழும்பின் புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77 பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதர பிரிவின் தகவல்கள் வெளியாகி உள்ளன..
கோப்பாய் தனிமைப்பதல் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன….
கோப்பாய் தனிமைப்பதல் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று அதிகாலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோப்பாய் தேசிய ஆசிரியர் பயிற்சி கலாசாலையானது தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டமேற்பட்ட தென் மாகாணத்தை சேர்ந்தவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று காலையிலிருந்து கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா…
களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, 7 ஆவது வார்டு மற்றும் வெளிநோயாளர் பிரிவு நேற்று (24.10.20) தற்காலிகமாக மூடப்பட்டது.
வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23 ஆவது வார்டு, வெளி நோயாளர் பிரிவு ஆகியன கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக களுபோவில வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா – மீன் உணவு – இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு…
நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றி மீன் சந்தை தொடர்ந்து நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.