தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து மேல் மாகாணத்தை விட்டு வௌியில் செல்வதை கட்டுப்படுத்துவதற்காக காவற்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை சிலரின் செயற்பாட்டால் பூரண பலனளிக்கவில்லை என காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் தான் மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான அறிவித்தலை முன்கூட்டியே தெரிவித்தாகவும் அதனை சிலர் வேறு விதமாக பயனபடுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களில் காணப்பட்ட வாகன நெரிசல் மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்த்தில் இருந்து, வௌியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் காவற்துறையினருக்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திங்கட் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.