Home இலங்கைதமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு த.வி.கூ அழைப்பு விடுக்கிறது

தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு த.வி.கூ அழைப்பு விடுக்கிறது

by admin

காணாமற் போனோர் சார்பில் சாகும் வரையிலான உண்ணாவிரதமிருக்கும் தாய்மார்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் மிக பணிவன்போடு தமிழர் விடுதலைக் கூட்டணி விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள். அது யாதெனில் இன்றைய சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் ஒரு உயிர்தன்னும் அநியாயமாக இழப்பதற்கு அனுமதிக்க முடியாது என்பதே. ஆகவே அரசு யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்பும, புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்ற விடயங்களை தருவதற்கு தட்டிக்கழிப்பது கண்டனத்துக்குரியதாகும்.

ஆகவே இச்செயற்பாட்டை ஆட்சேபித்து எதுவித கட்சி பேதமின்றி தமிழ் பேசும் கட்சித் தலைமை ஒன்றேனும் இந்த விடயத்தை தட்டிக்கழிக்காமல் சகல தமிழ் பேசும் கட்சி தலைமைகளையும் ஒன்றிணைத்து ஒரே குரலில் எமது ஆட்சேபனையை தெரிவிப்பதற்கும் அரசாங்கத்தை இந்த விடயத்தில் உடன் செயற்பட வைப்பதற்குமாக அனைவரையும் ஒன்று சேருமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகிறது.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளை போல் செயற்படும் திருவாளார் இரா.சம்பந்தன் அவர்களை எமது கட்சி சார்பில் அதன் செயலாளர் நாயகமாகிய நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் ஏகோபித்த முடிவுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்டுபட்டும் ஆதரவு வழங்கியும் இயங்குமென தெரிவித்துக்கொள்கிறேன்.

வீ.ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம் – த.வி.கூ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More