அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தால், நாட்டின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கீழுள்ள சில அரசாங்க நிறுவனங்கள், ஜனாதிபதிக்கு கீழ் செயற்படவுள்ளன.
நேற்று முன்தினம் (20.11.20) வெளியிடப்பட்டுள்ள பிரத்தியேக வர்த்தமானி மூலமே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக நிதியமைச்சர் என்ற வகையில், பிரதமருக்குக் கீழ் இருந்த பாதுகாப்பு அமைச்சு, உள்விவகார அமைச்சு, கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சு போன்றவைக்கு மேலதிகமாக, தொழில்நுட்ப அமைச்சு, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் கிராமப்புற கைத்தொழில் அமைச்சு ஆகிய அனைத்தும், ஜனாதிபதிக்குக் கீழ் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#20ஆவதுதிருத்தம் #வர்த்தமானி #கோத்தாபயராஜபக்ஸ