Home இலங்கைதேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணிலை நியமிக்க பாிந்துரை

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணிலை நியமிக்க பாிந்துரை

by admin

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளாா்.


கட்சி தலைமையகம் சிறிகொத்தவில் இன்று (23) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பிரதிநிதிகள் இதுதொடர்பில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியதாக தொிவித்துள்ள அர்ஜுன ரணதுங்க அடுத்த வாரமளவில் இது தொடர்பிலான இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் தொிவித்துள்ளாா். #தேசியபட்டியல் #பாிந்துரை #ரணில்விக்ரமசிங்க

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More