Home இலங்கையாழில் தெற்கிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு

யாழில் தெற்கிலிருந்து வந்தவர் சடலமாக மீட்பு

by admin

யாழில் இயங்கி  வரும் உணவகம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் நபர் உணவகத்தில் தங்கியிருந்த வேளை உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மூன்று தினங்களுக்கு முன்னரே கொழும்பில் இருந்து வருகை தந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. 


இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட உணவகத்தை உடனடியாக தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்த யாழ்ப்பாண காவல்துறையினா் உணவகத்தில் பணியாற்றும் எவரையும் உணவகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வில்லை. 


அதேவேளை சடலம்  யாழ்.போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.  #உணவகம் #சடலம் #யாழ்ப்பாணம் #காங்கேசன்துறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More