Home இலங்கைசங்காபிசேகத்திற்கு தடை விதித்த காவல்துறையினா்

சங்காபிசேகத்திற்கு தடை விதித்த காவல்துறையினா்

by admin

சாவகச்சேரி நகர சபை வளாகத்தில் உள்ள ஆலய சங்காபிஷேகம் மாவீரர் நாளான 27ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் அதற்கு காவல்துறையினா் தடை விதித்துள்ளனர். 


குறித்த ஆலயத்தின் சங்காபிஷேகம் 27ஆம் திகதி ஆகும், அன்றைய தினம் மாவீரர் நாள் என்பதனால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறையினா் அனுமதி மறுத்துள்ளனர். 


ஆலயத்தை சேர்ந்தவர்களால் , மாவீரர் நாளுக்கும் சங்காபிசேகத்திற்கும் தொடர்பு இல்லை என தெளிவூட்டிய போதிலும் , அதனை ஏற்க மறுத்த காவல்துறையினா் இறுதியாக குருக்களுக்கும் , உபய காரருக்கும் , மேலதிகமாக ஒருவருக்குமாக மூவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குகின்றோம். மூவருடன் அன்றைய தினம் சங்காபிசேகத்தை நடத்துமாறு பணித்துள்ளனர். #சாவகச்சேரி #சங்காபிஷேகம் #தடை #மாவீரர்நாள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More