குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து சில ஆண்டுகள் புனர்வாழ்வுக்கு உட்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தேவை என்றால் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணிமனை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற, வன்னி புனர்வாழ்வு இணைப்புப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர். ஹமிடோன் தெரிவித்துள்ளார்.
சுமார் 12,000த்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர் எனவும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.