மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளதுடன், காயமடைந்த கைதிகள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் அடங்குவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.