238
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் நடைபவணி ஒன்றினை இன்றைய தினம் நடாத்தி இருந்தனர்.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட முன்றலில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.30க்கு ஆரம்பமான நடை பவணி பலாலி வீதி ஊடாக வைத்தியசாலை வீதியை சென்றடைந்து அங்கிருந்து யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்தனர்.
குறித்த நடை பவணியில் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் , யாழ்.தொழினுட்பட கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Spread the love