Home இலங்கைகாரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

by admin

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவரது வீட்டுக்கு அண்மையில் வசித்து வந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபா் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவரை கொவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. #காரைநகர் #தனிமைப்படுத்தல் #யாழ்போதனாவைத்தியசாலை #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More