Home இலங்கைதொடர்ந்து வெள்ளத்திற்குள் நின்ற கால்நடைகள் உயிரிழப்பு

தொடர்ந்து வெள்ளத்திற்குள் நின்ற கால்நடைகள் உயிரிழப்பு

by admin

சாவகச்சேரி பகுதியில் வெள்ளத்தினால் , படுக்க முடியாது இரண்டு நாட்கள் தொடர்ந்து நின்றதால்  08 கால் நடைகள் உயிரிழந்துள்ளன.
யாழில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாவகச்சேரி பகுதியில் கால் நடை வளர்க்கும் இரு குடும்பங்களில் வீட்டு வளவினுள் வெள்ளம் காணப்பட்டுள்ளது. 


அதனால் அவர்கள் வளர்த்த மூன்று ஆடுகள் மற்றும் ஐந்து மாடுகள்  வீட்டு வளவினுள் வெள்ளம் காணப்பட்டமையினால் அவற்றால்   படுக்க முடியாமல் இரண்டு நாட்கள் வெள்ளத்தினுள் நின்றுள்ளதனால் அவை உயிரிழந்துள்ளன. 
உயிரிழந்த கால் நடைகளின் பெறுமதி சுமார் ஐந்து இலட்சம் என உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #வெள்ளம் #கால்நடைகள் #உயிரிழப்பு #சாவகச்சேரி  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More