இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோருக்கு கொரோனா தொற்று தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தொிவித்துள்ளாா்.
மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் , சுகாதார ஸ்தாபனத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
தடுப்பூசி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அவை எப்போது அவை விநியோகிக்கப்படும் என தொிவிக்கப்படவில்லை எனத் தொிவித்துள்ள அவா் தடுப்பூசி கிடைக்கப்பெற்றவுடன் அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் காணப்படல் வேண்டும் எனவும் தொிவித்துள்ளாா்.
இதேவேளை, 10 வீதமானவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி கிடைக்கப்பெறும் பட்சத்தில் எவ்வித முன்னுரிமையின் அடிப்படையில் இவற்றை பெற்றுக்கொடுப்பது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மேலும் எந்த ரக தடுப்பூசி கிடைக்கப்பெறும் எனும் தகலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதனால் தடுப்பூசியை களஞ்சியப்படுத்த (-)80 பாகை செல்சியஸ் குளிரூட்டி அவசியம் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
COVAX செயற்றிட்டத்தின் கீழ் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும்; 189 நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #இலங்கை #கொரோனா #தடுப்பூசி #உலகசுகாதாரஸ்தாபனம்