Home இலங்கைஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்

ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்

by admin

பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதருக்கும் தோ்தல் ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்ட போதே பிரதமா் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேவேளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என மாகாண சபை அங்கத்தவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #ஏப்ரல் #மாகாணசபைத்தேர்தல் #மகிந்தராஜபக்ஸ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More