பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக எலிஸே மாளிகை இன்று அறிவித்திருக்கிறது.
வைரஸ் தொற்றியதுக்கான முதல் அறிகுறி தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது. ஜனாதிபதி மக்ரோன் ஏழு நாட்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்தியவாறு தனது நாளாந்த நடவடிக்கைகளைத் தொலைவில் இருந்து மேற்கொள்வார் என எலிஸே மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அவருக்குத் தொற்றின் தீவிர அறுகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்பதை எலிஸே மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.
42 வயதானஜனாதிபதிக்கு வைரஸ் தொற்றியுள்ளதை அடுத்து அவருடன் தொடர்புகளைப் பேணிவந்த பிரதமர் Jean Castexம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.