முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர், பிமல் ரத்நாயக்க
இத்தடவை வரவு -செலவில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளதெனும் கருத்து நிலவுகின்றது. இந்த நிலைமையை நீங்கள் எப்படி பகுப்பாய்கிறீர்கள்?
இந்த அரசாங்கம் மாத்திரமல்ல, கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் இலங்கையில் கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி சதவீத அடிப்படையில் வெட்டிவிடப்பட்டு வருகின்றது. அரசாங்கங்களின் முதலாளித்துவ கொள்கைகளுக்கிணங்க பொதுச்சேவைகளை வெட்டிவிட்டு தனியார் கம்பெனிகளுக்கு கையளிக்கும் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்படுகின்றது. எம்மைப்போன்ற ஒரு நாட்டில் பாரியளவிலான உற்பத்தித் துறைகளில் நன்மைகளில் முன்நோக்கி நகர இயலாது. அத்தகைய முதலீடுகளிலிருந்து பெரிய ஒன்றை உலகிற்கு கொடுத்துவிடவும் முடியாது. இன்றளவில் கடந்த இருநூறு வருடங்களில் உலகம் கைத்தொழில்மயமாகி விட்டது. கொரியா, தாய்வான் போன்ற நாடுகள் தற்போது அந்த நிலைமயை உச்ச கட்டத்திற்கு கொண்டுவந்து விட்டன. எனவே எம்மைப்போன்ற நாடுகளுக்கு அதன் பின்னால்சென்று புதிதாக ஒன்றைச் செய்துவிட இயலாது. அப்படியாயின் உலகில் முன்நோக்கி செல்லக்கூடியகையில் வகையில் இருப்பது அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட சேவைகளை வழங்குவதாகும். அதன்பொருட்டு நாட்டின் சிறார்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கவேண்டும். ஆனால் அரசாங்கங்கள் கல்விக்காக ஒதுக்குகின்ற நிதியை வெட்டிவிடுவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான சிறார்கள் கல்வியை இழக்கிறார்கள். அதாவது உலகத்துடன் போட்டியிடுவதற்காக எம்மிடமுள்ள பிரமாண்டமான ஆயுதத்தை இழக்கின்றோம்.
ஆனால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கிணங்க தகவல் தொழில்நுட்பத்தையும் அறிவையும் முன்னெடுத்துச்செல்வதாக கூறப்பட்டுள்ளதல்லவா?
இன்றளவில் நடுத்தர வகுப்பிலிருந்து கீழ்நோக்கியதாக மக்களின் பொருளாதார மட்டம் பாரியளவில் சீரழிந்துள்ளது. பெற்றோர்களால் கல்விக்காக செலவிடக்கூடிய அளவு முன்னரைவிடக் குறைவானதாகும். அதேவேளையில் ஒன்பது மாதங்களாக பாடசாலைக் கல்வி சீரழிந்துள்ளது. ஒன்லயின் கல்வியைப் பெற்றுக்காள்ளுமாறு பிள்ளைகளுக்கு பாரிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. ஏற்கெனவே இலங்கையின் பிள்ளைகளுக்கு பாடசாலையிலிருந்து அவசியமான கல்வி கிடைக்காமையால் டியுஷன்களுக்கு பாரிய சந்தை உருவாகியுள்ளது. இவ்விதமாக நிதியை வெட்டிவிடுவதால் நேரிடுவது பிள்ளைகள் மென்மேலும் பிரத்தியேக கல்வியை நோக்கி ஆற்றுப்படுத்தப்படுவதேயாகும். ஏற்கெனவே இலங்கையின் பிரதான நகரங்களில் ஒருசில பாடசலைகளில் தவிர உயர்தர பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை. பாடசாலை வாழ்க்கை ஓலெவலுடன் முடிந்துவிடுகின்றது. பெரும்பாலானவர்கள் உயர்தரத்தை முற்றாகவே வெளியிலேயே கற்கிறார்கள். அவ்வாறான நிலைமையில் இருக்கின்ற நிதியையும் வெட்டிவிடுவதால் பெருந்தொகையானோர் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஏற்கெனவே வெளியேறுவது மென்மேலும் வளர்ச்சி அடைகின்றது.
நிலவுகின்ற கொறோனா நிலைமை நேரடியாகவே கல்விமீது தாக்கமேற்படுத்தி உள்ளமையை நீங்கள் இனங்கண்டுள்ளீர்களா?
மிகவும் பாரதூரமான நிலைமையே காணப்படுகின்றது. இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு பின்னர் உள்ள மூத்தவர்கள் கூறுவார்கள், அவர்களின் கல்வி அற்றுப்போனது கொறோனா நிலைமை காரணமாவே என்று. அந்த எண்ணிக்கை கொஞ்சநஞ்சமானதாக அமையப்போவதில்லை. இதனால் அரசாங்கம் செய்யவேண்டியது என்னவென்றால் எதிர்கால அபாயத்தைக்கண்டு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்வதாகும். இயலுமானால் சீசன்களை இலவசமாகக் கொடுத்து, ஸ்கூல்வேன்களை இலவசமாகக் கொடுத்து, தனிமைப்படுத்தல் சுகாதாரப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதாகும்.
நீங்கள் கூறுகின்றதையே கொறோனா நிலைமையின்கீழ் நடைமுறைப்படுத்துவதை தானே அரசாங்கத்தின் கொள்கையும் கூறுகின்றது. ?
அரசாங்கம் கூறுவதைப்போலவே நடைமுறையில் மேற்கொண்டாலும் செய்துகொண்டிருப்பது என்ன? அறிவினை மையமாகக்கொண்ட எனும் லேபலின்கீழேயே வழக்கொழிந்த கல்வியை வழங்குவதாகும். வயலைக் கொத்தினாலும் இரண்டு கைகளும் கால்களும் இருந்தால் மாத்திரம் போதாது. அறிவு இருத்தல்வேண்டும். ஆனால் எளிமையான அறிவைக்கொண்டு எளிமையாக எடுக்கக்கூடிய அறிவு கிடைக்கின்ற கல்வித் திட்டத்தை கடைப்பிடிப்பதையே அரசாங்கம்செய்து வருகின்றது. எனினும் எதிர்காலத்தில் தேவைப்படுவது சிக்கலான அறிவு கிடைக்கின்ற கல்வித் திட்டமொன்றாகும். உதாரணமாக கடையொன்றில் சாமான்களை விற்கவும் ‘வட்ஸ்எப்’ பாவனை பற்றிய புத்தம்புதிய அறிவு தேவைப்படுகின்றது. அந்த அறிவினைப் பெற்றுக்கொடுக்காமல் மேலும் கீழ்நோக்கி தள்ளிவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமானகையில் தாக்கமேற்படுத்தும்.
நிலவுகின்ற கொவிட் நிலைமையின் மத்தியில் பிள்ளைகளின் கல்வியை சீரழியாமல் பேணிவர மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் மாற்றீடுளை முன்வைக்க இயலுமா?
நாங்கள் ஏற்கெனவே அரசாங்கத்திடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளோம். ஆனால் அரசாங்கம் அது பற்றி கவனஞ்செலுத்துவதைக் காணக்கூடியதாக இல்லை.
சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் என்ன?
நிலவுகின்ற நிலைமையின்கீழ் தொலைக்கல்வி தவிர்க்க இயலாத யதார்த்தமாகும். ஆனால் மூடப்பட்டுள்ள பிரதேசங்களின் கல்வியைப் போலவே திறந்துள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளின் கல்வியும் சமமானவகையில் சீரழிந்துள்ளது. இந்த வருடத்தில் ஒன்பது மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் தொலைக்கல்வியை நன்றாக ஒழுங்கமைத்துக் கொள்ளவேண்டியது அடிப்படையான தேவையாகும். நாங்கள் ஒன்லயின் கல்வியை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
அந்த முன்மொழிவுகள் என்ன?
ஒவ்வொரு மாணவருக்கும் இணையத்தள வசதிகளை இலவசமாக வழங்கவேண்டும். அதைப்போவே இணையத்தள வசதிகளுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை வேகமாக விருத்தி செய்யவேண்டும். அடுத்ததாக கையடக்கத் தொலைபேசி, லெப்டொப் போன்றவை மிகவும் உயர்ந்த விலைக்கு சென்றுவிட்டன. எனவே நியாயமான விலைக்கு இந்த உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதில் இடையீடுசெய்ய வேண்டும். அதைப்போலவே வறிய பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காகவும் வேலைத்திட்டமொன்றை வகுக்கவேண்டும். தமது அன்பர்களான பிஸ்னஸ்காரர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி சலுகை வட்டியை வழங்குகின்ற அரசாங்கத்திற்கு இந்த வேலையை செய்யஇயலாமல் போவதற்கான காரணமொன்று இருக்கமாட்டாது.
அடுத்தாக பிள்ளைகளுக்கு சிறிய திரையொன்றைப் பார்த்துக்கொண்டு படிப்பது சிரமானதாகும். அதனால் இணையத்தள கல்வியை பேணிவருகின்ற அதேவேளையில் தொலைக்காட்சி ஊடகமொன்றை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுக்கவேண்டும். இலங்கையில் பல செனல்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொன்றையும் மிகச்சிறப்பாக முகாமைசெய்து கல்விக்காக ஈடுபடுத்தவேண்டும். அதைப்போலவே பியோ ரீவீ போல் றீவயின் பண்ணி பார்ப்பதற்கான வசதிகளை செய்துகொடுக்கவும் வேண்டும். இன்றளவில் ஓரளவுக்கு ரூபவாஹிணியால் வழங்கப்படுகின்ற கல்விக்குக்கூட இந்த வசதிகள் வழங்கப்படவில்லை. மற்றுமொரு விசேடமான விடயம்தான் பாடவிதானங்களை நிறைவுசெய்வதற்கான கல்வித்திட்டமொன்றை இந்த நேரத்தில் வழங்க இயலாது. எனவே பிள்ளைகளுக்கு ஆசிரியருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள இயலாதென்பதால் கல்விக்குள்ளே பிள்ளைகளை தக்கவைத்துக் கொள்கின்ற திருத்திய பாடவிதானமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நிலவுகின்ற கல்வியில் ஆசிரியர்களுக்கும் பாரதூரமான சிக்கல்கள் உள்ளனவல்லவா?
நிலவுகின்ற நிலைமையில் இணையத்தளத்தின் ஊடாக இருபது நிமிடங்களுக்கு மேலாக செல்லவேண்டாமென உலகத்தின் முன்னேற்றமடைந்த நாடுகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. எஞ்சியுள்ள நேரத்தில் பிள்ளைகளுடன் கலந்துரையாடுமாறே கூறுகிறார்கள். உளவியல் சம்பந்தமான பின்புலத்தை கருத்தில்கொண்டே இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் எட்டு, பத்து வருட வயதுள்ள பிள்ளைகளுக்குக்கூட தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் பேசவேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக சிலபஸ் கவர் பண்ணுவதிலிருந்து மீட்டெடுக்குமாறு நாங்கள் கல்விமான்களிடம் முன்மொழிகிறோம்.
அதைப்போலவே மறுபுறத்தில் ஆசிரியர்களுக்கும் ஒன்லயின் கல்வி மூலமாகவேனும் அவசியமான அடிப்படை பயிற்சியை புதிய நிலைமைக்கு ஒத்துவரக்கூடிய பயிற்சியை உடனடியாக வழங்கவேண்டும். சரியாக வானொலி நாடகமொன்றுக்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதைப்போன்றே ஆசிரியர்களுக்கும் இந்த இரண்டுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. இந்த அடிப்படை விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனஞ்செலுத்தி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அணுகுண்டைப் போட்டதைப் பார்க்கிலும் அழிவு பிள்ளைகளின் கல்விக்கும் நேர்ந்திடும்.