Home இலங்கைகாங்கேசன்துறையில் ஒதுங்கிய பொதிகள்!

காங்கேசன்துறையில் ஒதுங்கிய பொதிகள்!

by admin


காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த காவற்துறை அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறைப் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று (27.12.20) நண்பகல் மீட்டனர்.

எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More