Home இலங்கைஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார்

ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார்

by admin

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால் முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட் அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் நாளை தெரிவு இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆனல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். #இம்மானுவேல்_ஆர்னோல்ட் #யாழ்ப்பாணம்_மாநகரசபை #பாதீடு #முதல்வர் #இலங்கைதமிழ்அரசுக்கட்சி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More