காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன் போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளை கொள்ளாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா,
மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
காணாமல் போன உறவுகளைத் தேடி எத்தனையோ தாய் தந்தையர் உறவுகள் உயிரிழந்திருக்கின்ற நிலையிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு ஒருவர் ஒருவராக கொள்வதை விடுத்து உங்களை ஒட்டு மொத்தமாக கொன்று விடுங்கள்.
இவ்வாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி கதறியழுத உறவுகள் தங்களது பிள்ளைகளை கணவன்மாரை தங்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். #யாழில் #காணாமல்ஆக்கப்பட்டோாின்_உறவுகள் #போராட்டம் #தாய்_தந்தையர்