ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை அமைச்சா்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் அவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் மெய்ன் அப்துல்மாலிக் சயீத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சா்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தொிவிக்கப்பட்டள்ளது.
மேலும் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சி குழுவே காரணம் என பிாதமர் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஏமனில் 2015 இலிருந்து உக்கிரமடைந்துள்ள போரில் 110,000 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அங்கு பாரிய மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது #Yemen #Aden_airport #ஏமன் #வெடிகுண்டு_தாக்குதல் #பிரதமர் #அமைச்சரவை