Home இலங்கைகோதபாய எவ்வளவு பெரிய தேசப்பற்றாளர் என்பது மிக் கொடுக்கல் வாங்கல் விசாரணைகளின் பின் தெரியும் – ராஜித

கோதபாய எவ்வளவு பெரிய தேசப்பற்றாளர் என்பது மிக் கொடுக்கல் வாங்கல் விசாரணைகளின் பின் தெரியும் – ராஜித

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ எவ்வளவு பெரிய தேசப்பற்றாளர் என்பது, மிக் இராணுவ விமானக் கொள்வனவு குறித்த மோசடி விசாரணைகளின் பின்னர் தெரிய வரும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உடுகம பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்  அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் மோசடிகள் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கம் விசாரணை நடத்திய முறையில் தற்போதைய அரசாங்கம் விசாரணை நடத்துவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நீதியானதும், சுயாதீனமானதும் சட்டத்திற்கு அமையவுமே விசாரணை நடத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். சில காலங்களில் கோதபாய ராஜபக்ஸவின் உண்மை முகம் அம்பலமாகும் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More