இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் அங்கிருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள றிலையில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிகளவானோார் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேவேளை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனற் போதிலும் இரண்டு முதன்மை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதனால் நிலடுக்கத்துக்குப் பிந்திய வலுவான அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் சுனாமி ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக அதிகாரிகள் தொிவித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. .#இந்தோனேசியா #நிலநடுக்கம் #சுனாமி #மருத்துவமனை #பலி