Home அரசியல் ஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை

ஊர்களின் பெயரை அதிகளவில் உச்சரிக்கின்ற அரசியல்வாதிகள் ஊருக்கு வருவதில்லை மக்கள் கவலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இறுதி யுத்தம் இடம்பெற்ற  பிரதேசங்களான முல்லைத்தீவின் மாத்தளன், அம்பலவன்பொக்கணை,வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களின்  பெயர்களை அதிகளவில் உச்சரிக்கும் அரசியல் வாதிகள் தங்கள் கிராமங்களுக்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்வதில்லை மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

அரசியல் கூட்டங்களிலே முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை என பெயர்கள் சொல்லி தங்களுடைய அரசியல் வாழ்வை நகர்த்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய கிராமங்களை வருகை தந்து பார்ப்பதில்லை எனவும் 450 வரையான குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ள போதிலும் இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான முதன்மை வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் கிராமங்களின் உள்வீதிகள் புனரமைக்கப்படாததன் காரணமாக அம்பலவன்பொக்கணை மகா வித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்கள்; வீதியில் தேங்கி நிற்கும் வெள்ளத்தினால் சப்பாத்துகளை கழற்றி கைகளில் ஏந்திச் செல்லும் நிலைமை காணப்படுவதாகவும் இக்கிராமங்களின் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களுடைய கிராமங்களை தமது அரசியலுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் எமது கிராமத்தின் வீதிகளை புனரமைத்தார்களா அல்லது வாழ்வாதாரத்திற்கு உதவினார்களாக ஒன்றுமே செய்யவில்லை என தெரிவிக்கும் இக்கிராம மக்கள் தேர்தல் காலத்தில் பஸ்களை எமது கிராமத்திற்கு அனுப்பி தமக்கு வாக்களிக்கச் செய்பவர்கள் எமது கிராமத்திற்கு பஸ் சேவைகள் நடைபெறுவதில்லை என்பதைக் கருத்திற்கொண்டும் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. எனவே தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளினால் எமது கிராமம் வளரவுமில்லை. நெருக்கடிகளுடனேயே மக்கள் வாழ்க்கை நடாத்துகின்றனர். எமது கிராமத்தின் பெயர்களை அரசியல்வாதிகள் தமது சுய இலாப அரசியலுக்காகப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வதே சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More