Home இலங்கை18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி

by admin

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடர்பாக யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தொிவித்துள்ளாா்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உலகின் சில நாடுகள் சிறந்த முடிவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். #இராணுவப்_பயிற்சி #சரத்_வீரசேகர #ஒழுக்கம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More