கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளாா்
ரஸ்ய ஜனாதிபதி புட்டினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த 44 வயதான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி டாம்ஸ்க் நகரிலிருந்து மொஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அவர் குடித்த தேனீாில் விஷம் கலந்து கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவா் ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டடு உடல்நிலை தேறிய நிலையில் அவா் நேற்றையதினம் ஜெர்மனியில் இருந்து ரஸ்யாவிற்கு புறப்பட்டார்.
அவர் ஜெரெமெட்வோ விமான நிலையத்தினை சென்றடைந்ததும் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாா் .
நவால்னியின் கைது தொடா்பில் ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை ந உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நோவிசோக் நச்சுப்பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சி நடந்ததை பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #கொலை_முயற்சி #ரஸ்ய #எதிர்க்கட்சித்தலைவர் #கைது #அலெக்சி_நவால்னி