Home இலங்கைமுல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் கடற்படைக்கு அறிவித்துள்ளதாக அரச அதிபா் தெரிவிப்பு

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் கடற்படைக்கு அறிவித்துள்ளதாக அரச அதிபா் தெரிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக கேட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். சமாசத் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் பல்வேறு வழியிலான போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்திய நிலையில் ஓய்ந்திருந்த இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More