Home இலங்கைதவறான நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினர் மானிப்பாயில் கைது!

தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினர் மானிப்பாயில் கைது!

by admin

மானிப்பாய் காவற்துறைப் பிரிவில் இளம் பெண் ஒருவரை காவற்துறை உத்தியோகத்தருக்கும் பணத்துக்காக விற்க முற்பட்ட குழு ஒன்று சிக்கியுள்ளது.

முச்சக்கர வண்டியில் நடமாடும் செயற்பாட்டாளர்களாக செயற்பட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 45 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி பணமீட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு உடந்தையாக முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர்.
அந்த நான்கு பேரும் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட குழு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய காவற்துறை உத்தியோகத்தர்
ஒருவர் ஊடாக குழுவுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி,அந்தக் குழுவைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் பெண்களை வைத்து பணம் உழைப்பதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் 3 மாதங்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு
இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நடமாடும் குழுவினர் என மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததுடன் அந்தக் குழுவிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More