குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம் குறித்த அமெரிக்காவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் புகலிடம் கோரி சென்று, நவுரு மற்றும் பபுவா நியூ கினி போன்ற நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு ட்ராம்ப் இணங்கியுள்ளார்.
அதேவேளை குவத்தமாலா, ஹொண்டுராஸ் மற்றும் எல் சல்வடோர் ஆகிய நாடுகளில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள் குறித்து சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.