Home இலங்கைமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் வரை, சமஷ்டி – வடக்கு கிழக்கு மீளிணைப்பு -கனவிலும் நடக்காது – மஹிந்த அமரவீர:-

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் வரை, சமஷ்டி – வடக்கு கிழக்கு மீளிணைப்பு -கனவிலும் நடக்காது – மஹிந்த அமரவீர:-

by admin

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் வரை சமஷ்டி மற்றும் வடக்கு கிழக்கு மீளிணைப்பு என்பது கனவிலும் நடக்காதென தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, “ஒற்றையாட்சிக்கு அப்பால் ஒருபோதும் செல்லமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளதோடு, இதனை குழப்புவதற்காக அரசாங்கம் சமஷ்டியை வழங்கப்போகின்றதென சிலர் போலியாக பிரசாரம் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்..

அரசை கவிழ்ப்பதற்காகவே இவ்வாறான போலியான பிரசாரங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு மக்கள் ஏமாறக்கூடாதெனவும் கூறியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டின் சகல மக்களதும் விருப்பத்தைப் பெற்றே தீர்வு முன்வைக்கப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More