நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான இன்றைய நாளினை வடக்கு, கிழக்கில் கரிநாளாக கடைப்பிடிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு போராடி வரும் உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்நிலையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது, போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்து, போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனவும் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என கடும் தொனியில் தெரிவித்தனர்.
எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும்
ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.
அதனால் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் உறவுகள் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர். #தடையைமீறி #யாழில் #கறுப்புப்பட்டி_போராட்டம் #சுதந்திரதினம் #காணாமல்ஆக்கப்பட்டோருக்கு