ஜனாதிபதி சட்டத்தரணியும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது.
நேற்றிரவு வழங்கப்பட்ட திடீர் அறிவிப்பின் போில் காரணம் எதுவும் அறிவிக்கப்படாது இவ்வாறு சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
அதேவேளை சிறப்பு அதிரடிப் படையினரை வைத்துக் கோண்டு பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறு சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சுமந்திரன் #சிறப்புஅதிரடிப்படை #பாதுகாப்பு #பேரணி