நறுமணம் வீச
நல்மலர்களில்லை
வேதாளம் அலைகிறது
வெள்ளெருக்குப் பூக்கிறது
பாதாளமூலிபடர்கிறது
நெருஞ்சியும் நரகத்துமுள்ளுமன்றி
வேறெதுவும் அங்கும் இல்லைஎங்கும் இல்லை
வெறுப்பும் வேதனையுமன்றி
விரும்பஎதுவும் அங்கும் இல்லைஎங்கும் இல்லை
வேண்டாம் என்றுசொல்ல
முடியவுமில்லை – சொல்ல
முயன்றால் மூச்சும் இல்லை
பேச்சு மூச்சற்ற இடுகாடே
பிறர் முற்றம்
மாறவேண்டும் இந்நிலைமை
மனிதர் வாழவேண்டும்
மனிதம் உயிர்க்கவேண்டும்
மாற்றார் முற்றங்களில்
இலாபவாணிபவிளைச்சலின் நச்சுக் கனிகளன்றோ?!
முற்றிப் பழுத்தலென்ன
கொந்தலும் அறியா
வெம்பல் நிகர் வதைகனிகள்
நச்சு இரசாயனங்களில்
வதைபட்டகாய்கள் பிஞ்சுகள்
மனம் விரும்பும் கனிகளென
வாணிபத்தில் நச்சுக்கனிகள்
குழந்தைகள் கர்ப்பிணித் தாய்மார்
நோயுற்றோர் முதியோரெனில்…
இலக்கியங்கள் அறியத்தந்த
போரியல் விதிகளுமற்று
நச்சு இரசாயனங்களில்
வதைபட்டகாய்கள் பிஞ்சுகள்
மனம் விரும்பும் கனிகளென
வாணிபத்தில் நச்சுக்கனிகள்
இன்னும் பழையநினைவுகளில்
நலிவுநீங்கிப் பொலிவுபெற
குழந்தைகள் கர்ப்பிணித் தாய்மார்
நோயுற்றோர் முதியோர்
சுகம்பெற்றுவாழமற்றும்
எல்லோரும் நலம்பெற்றுவாழ
மனம் விரும்பி
வாங்கும் வழங்கும் கனிகள்
இலாபவாணிபவிளைச்சலின்
நச்சுக் கனிகளன்றோ?!
ஆளிலும் மேலானஅத்தாட்சிகளின் உலகில்…
மதியிலார் சபையில்முன்னால் இருப்பினும்
மனிதர்
அவர்திறன் மதியார்
முன்னிருக்கும் மனிதர்கைக்
காகிதங்கள்
முதன்மைபெறும்
மனிதரைச் சடமாகமுன்னிருத்தி
காகிதங்களில் தடவுவர்
அம்மனிதர்
அறிவைஆற்றல்களை
பொதுப்புத்திபொதிந்த
பொதுஅறிவைஅறியார்
பயிற்சிப் புத்தகங்களின்
வினாக்களுக்குவிடைகேட்டு
மதிப்பிடுவர்
காகிதங்கொண்டார்
வாங்கப்பட்டதாயினும்
காகிதங்கொண்டார்
கொள்ளும் தொழிலில்
வளர்ச்சியேது,மீட்சியேது?!
ஆக்கம்:சி.ஜெயசங்கர்