குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான மூன்று அறிக்கைகள் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவின் தலைவர் பீரிதி பத்மன் சூரசேனவினால், ஜனாதிபதியிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் கேட்டரின் சேவையில் இடம்பெற்ற மோசடிகள், ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள், லுனுவில தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் என்பன குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.