Home இலங்கைமோ்வின் சில்வா உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை

மோ்வின் சில்வா உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை

by admin

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மற்றும் இளைஞா்களைப் பற்றி மேர்வின் சில்வா பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா் வடக்கு, கிழக்குக்கு வரும் போது பாதுகாப்பின்றி வருவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

காவல்துறை சீருடையில் தான் இருந்திருந்தால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களின் கால்களை முறித்திருப்பேன் என, மேர்வின் சில்வா, அண்மையில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாாா்.

மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எழுச்சிப் போராட்டமானது, ஜனநாயக ரீதியான போராட்டமாகும் எனவும் இந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில், மேர்வின் சில்வா கருத்துத் தெரிவித்துள்ளாரெனவும் அவரது இவ்வாறான கருத்துக்கள் கோமாளித்தனமாகவே இருக்கின்றதெனவும் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா்.

மேலும் மோ்வின் சில்வா உடைக்கக்கூடிய நிலையில் தமிழர்களின் கால்கள் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் இந்த நாட்டில் காவல்துறை சீருடையில் இருந்தால், இவர் கூறுவதைப் போன்று மக்களின் கால்களை உடைக்கமுடியுமா?” எனவும் இவரது இத்தகைய கருத்து, காவல்துறையினாின் செயற்பாடுகளையும் கடமைகளையும் கேலிசெய்வதாக அமைந்துள்ளதாகவும் தொிவித்த ரவிகரன் நிச்சயமாக இவ்வாறானவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தொிவித்துள்ளாா். #மோ்வின்சில்வா #தமிழர்களின் #கால்கள் #ரவிகரன் #வடக்குகிழக்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More