வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுக் காடுக்குமாறு கோரி, கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று (20.02.21) தீச்ட்டிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உரிய பதில் இதுவரை கிடைக்காத நிலையில், இன்று (20.02.21) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்நாட்டில் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் சர்வதேசமே நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில், தமது விவகாரம் தொடர்பாக உரிய தீர்வு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் வகையில் தீச்சட்டி ஏந்தி இன்று போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்- Thamilselvan Murukaiya – FB