(க.கிஷாந்தன்)
இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று(23.02.2021 )முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் இன்று முற்பகலில் குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் பெண் தொழிலாளர்களும், 02 ஆண் தொழிலாளர்களுமாவர்.
இவர்களில் 06 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், எஞ்சிய 06 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 6 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். #குளவி_தாக்குதலுக்கு #பாதிப்பு