15 பிரதேச செயலக பிரிவுகளில் 22.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் “கிராமத்துக்கு மைதானம்” அங்குரார்ப்பண நிகழ்வு
விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் “செம்மையான முன்னேற்றமிக்க இளைஞர்களை உருவாக்குவோம்” என்ற செயற்றிட்த்தின் அடிப்படையில் தேசிய ரீதியில் நேற்று (02) நாடு பூராகவுமுள்ள 332 பிரதேச செயலகங்களில் கீழ் உள்ள கிராமங்களில் மைதானம் அமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களிலும் கீழ் உள்ள கிராமங்களில் தலா ஒரு மைதானம் அமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய ரீதியாக காலை 10.25 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள “விண்மீன் விளையாட்டுக்கழக மைதானம்” அமைக்கும் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாநகர முதல்வர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவடலட அரசாங்க அதிபர் (காணி), யாழ் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலகர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலர் Covid – 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ள ஏனைய 14 பிரதேச செயலகபிரிவுகளின் 14 மைதானங்களுக்குமான அங்குராட்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளில் அங்கஜன் இராமநாதன், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல்ராஜாபக்ஸவின் வடமாகாண இணைப்பாளர் குலேந்திரன் சிவராம், குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலகர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், கிராம மக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்படி
1. நெடுந்தீவு பிரதேசத்தில் ஜே/01 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஐக்கிய தீபம் விளையாட்டுக் கழகத்திலும்
2. வேலணை பிரதேசத்தில் ஜே/114 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஐயனார் விளையாட்டுக் கழகத்திலும்
3. ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஜே/154 கிராம சேவகர் பிரிவிலுள்ள இருதயராஜா விளையாட்டுக் கழகத்திலும்
4. காரைநகர் பிரதேசத்தில் ஜே/47 கிராம சேவகர் பிரிவிலுள்ள கலாநிதி விளையாட்டுக் கழகத்திலும்
5. யாழ்ப்பாண பிரதேசத்தில் ஜே/61 கிராம சேவகர் பிரிவிலுள்ள விண்மீன் விளையாட்டுக் கழகத்திலும்
6.நல்லூர் பிரதேசத்தில் ஜே/91 கிராம சேவகர் பிரிவிலுள்ள காந்தி சனசமூக நிலையம் மற்றும் அரியாலை விளையாட்டுக் கழகத்திலும்
7. சண்டிலிப்பாய் பிரதேசத்தில் ஜே/133 கிராம சேவகர் பிரிவிலுள்ள யூனியன் விளையாட்டுக் கழகத்திலும்
8. சங்கானை பிரதேசத்தில் ஜே/165 கிராம சேவகர் பிரிவிலுள்ள சங்கானை Y.M.H.A வட்டு விளையாட்டுக் கழகத்திலும்
09.உடுவில் பிரதேசத்தில் ஜே/210 கிராம சேவகர் பிரிவிலுள்ள குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்திலும்
10. தெல்லிப்பளை பிரதேசத்தில் ஜே/125 கிராம சேவகர் பிரிவிலுள்ள மாவை கலட்டி உதயதாரகை விளையாட்டுக் கழகத்திலும்
11. கோப்பாய் பிரதேசத்தில் ஜே/273 கிராம சேவகர் பிரிவிலுள்ள வளர்மதி விளையாட்டுக் கழகத்திலும்
12. சாவகச்சேரி பிரதேசத்தில் ஜே/341 கிராம சேவகர் பிரிவிலுள்ள நவா சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திலும்
13. கரவெட்டி பிரதேசத்தில் ஜே/356 கிராம சேவகர் பிரிவிலுள்ள வல்வெட்டி யுனிட்டி விளையாட்டுக் கழகத்திலும்
14. பருத்தித்துறை பிரதேசத்தில் ஜே/412 கிராம சேவகர் பிரிவிலுள்ள பருத்தித்துறை பிரதேச செயலக உள்ளக அரங்கிலும்
15. மருதங்கேணி பிரதேசத்தில் ஜே/418 கிராம சேவகர் பிரிவிலுள்ள மணற்காடு சென். அந்தோனி விளையாட்டுக் கழகத்திலும் அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெற்றது #கிராமத்துக்குமைதானம் #அங்குரார்ப்பணநிகழ்வு