உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளாா்
உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்ட நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
கடந்த ஆண்டு ஸ்பெயினின் ரபெல் நடாலை வென்று முதல்நிலைக்கு முன்னேறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.
18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 33 வயதான ஜோகோவிச் 2011-ம் ஆண்டு முதல்முறையாக தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறினார். தற்போது அவர் 5-வது முறையாக முதலிடத்தில் உள்ளாா். 5 வெவ்வேறு காலகட்டங்களில் அவர் மொத்தம் 311 வாரங்கள் முதலிடத்தில் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
48 ஆண்டு கால உலக தரவரிசை வரலாற்றில் இதற்கு முன்பு 39 வயதான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மொத்தம் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளாா். #ரோஜர்_பெடரா் #சாதனை #ஜோகோவிச் #முறியடிப்பு #டென்னிஸ்