இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3 ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இந்த தீ விபத்தினால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டள்ளது
தீ விபத்துக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த இராகலை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். #இராகலை #தொழிலாளர்_குடியிருப்பில் #தீக்கிரை