Home இலங்கைஇந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு – முக்கிய விடயங்கள் ஆராய்வு:

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு – முக்கிய விடயங்கள் ஆராய்வு:

by admin


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும இடையில்  யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13) காலை 9.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளாா்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சந்திப்பில் பல்வேறுபட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் .முக்கியமாக தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.


ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகு விரைவில் இடம் பெறும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்ததாகவும் அவா் தொிவித்துள்ளாா்.


ஆக்கபூர்வமாக இடம் பெற்ற குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்தார். #இந்திய_உயர்ஸ்தானிகா் #தமிழ்தேசியக்கூட்டமைப்பு #சந்திப்பு #கோபால்_பக்லே

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More