இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்ற்றங்கள், இனப்படுகொலை குறித்து சுதந்திரமான- நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.
ஈழத் தமிழர் சிக்கலுக்கு தீர்வு காண இலங்கையில் உள்ள தமிழர், புலம்பெயர் ஈழத் தமிழரிடையே ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்கள், 30 ஆண்டுகளுகு மேலாக அகதிகள் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடு தமிழர் நலன் பேணிட வெளிநாடு வாழ் தமிழர்கள் என்கிற புதிய அரசு துறை உருவாக்கப்படும். என திராவிட முன்னேற்றக்கழக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டள்ளது.