கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்கான மக்கள் பிரதிநிதி நியமிக்கப்படாமை ஜனநாயக விரோத செயல் என தெரிவித்த நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தொிவித்துள்ளது.
தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில், நேற்று (15) கருத்துத் தெரிவித்த அவ் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ், மக்கள் ஆணையை மதிக்காமல் ஜனநாயகம் தொடர்பான கருத்துகளை ஐக்கிய தேசிய கட்சி முன்வைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என தொிவித்துள்ளாா்.
நாடளாவிய ரீதியில், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளுக்கு அமைய, அந்தக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
கட்சிக்குள் இருக்கும் உட்பூசல் காரணமாக, பிரதிநிதியொருவரை நியமிக்காமல் இருக்கும் செயற்பாடானது, முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகுமெனத் தெரிவித்துள்ளாா்.
மேலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கருத்தை முன்வைக்கவோ, அது தொடர்பான ஆயத்தங்களில் ஈடுபடவோ ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். #மாகாணசபைத்_தேர்தல் #அருகதை #கபே #தேசியப்பட்டியல்