அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மாணவர்கள் மற்றும் பயணிகள் என 25 பேர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் பியர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தின் போது பேரூந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் காயமடைந்தவா்கள் உடனடியாக அம்புலான்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.
இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக குருதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #புகையிரதத்துடன் #பேரூந்து #மாணவன் #பலி #தலைமன்னார்