Home இலங்கைகுருதி வழங்க திரண்ட இளைஞர்கள்- சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருதி வழங்க திரண்ட இளைஞர்கள்- சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

by admin


தலைமன்னார் பகுதியில் இன்று மதியம் இடம் பெற்ற புகையிரத விபத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.


அதற்கு அமைவாக  மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று குருதி வழங்கியுள்ளனர்.

எனினும்  வைத்திய சாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு குருதியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குருதி சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இருப்பினும் இன்னும் குருதி தேவைப்படுவதனால் நாளைய தினமும் மன்னார் பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது. #குருதி #இளைஞர்கள் #நிறுத்தம் #தலைமன்னார் #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More